News August 15, 2025
டிரம்ப் – புடின் இன்று சந்திப்பு.. வர்த்தக போர் முடிவுக்கு வருமா?

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப், புடின் இருவரும் அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளனர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விற்பனை, பொருளாதார ஸ்திரத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயன்று வருகிறார். இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் இந்தியா மீதான வரியும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News March 24, 2026
FLASH: சேலத்திற்கு அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

2026 அதிமுக தேர்தல் அறிக்கையில் சேலம் சரபங்கா நீரேற்றுத் திட்டம் மூலம் 100 ஏரிகள் நிரப்பப்படும். பனைமரத்துப்பட்டி ஏரி மற்றும் வசிஷ்ட நதி இணைப்பு மூலம் பாசன வசதி மேம்படுத்தப்படும். சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். சேலத்தில் அரசு அடுக்கு மாடி வீடுகள் கட்டி நியாயமான வாடகையில் வழங்க வழிவகை செய்யப்படும் என அறிவிப்பு:இது குறித்து உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க மக்களே!
News March 24, 2026
PM மோடி – டிரம்ப் முக்கிய ஆலோசனை

மேற்காசியாவில் நிலவும் போர்ச்சூழல் பற்றி அதிபர் டிரம்ப், PM மோடி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு ஹார்முஸ் நீரிணை திறந்து இருப்பதன் முக்கியத்துவம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மேற்காசியாவில் அமைதி நிலவுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும் என டிரம்ப்பிடம் உறுதியளித்தாக X-ல் PM மோடி பதிவிட்டுள்ளார்.
News March 24, 2026
வங்கிக் கணக்கில் பணம்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

EPFO-வில் உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமார் ₹5,200 கோடி நிதியை சம்பந்தப்பட்டோரின் வங்கிக் கணக்கில் தானாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 55 வயதை கடந்த ஓய்வு பெற்றவர்களின் EPFO கணக்குகள் 3 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருந்தால் அவை செயலற்ற கணக்குகளாக கருதப்படும்.


