News August 15, 2025

ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு.. பணவீக்கமும் வீழ்ச்சி!

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று(ஆக.14) மீண்டும் 10 காசுகள் சரிந்து ₹87.57 ஆக உள்ளது. இதனிடையே, கடந்த ஜூலை மாதத்தில், மொத்த விலை பணவீக்கமும் மைனஸ் 0.58% என எதிர்மறையாக பதிவாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இதுதான் மிகவும் குறைவான பணவீக்க விகிதமாகும். உணவு பொருள்கள், கனிம எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றின் விலை சரிவால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 12, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News March 12, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News March 12, 2026

கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல்: EPS

image

திமுக கூட்டணியில், அதன் கூட்டணிக் கட்சிகள் அடிமையாக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் மோசமான, கையாலாகாத திமுக அரசை அகற்றுவதே அதிமுக கூட்டணியின் நோக்கம் என்றார். இந்த தேர்தல் தான் கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல் எனவும் கூறினார். மேலும், காங்கிரஸிடம் கெஞ்சி திமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!