News August 15, 2025
2 ஹெலிகாப்டர்களிலிருந்து PM மோடிக்கு மலர் தூவப்படவுள்ளன

இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு PM மோடி உரையாற்றயுள்ளார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5,000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
Similar News
News March 14, 2026
திடீரென உருவாகும் கட்சிகள் இப்படித்தான் மாறும்: TTV

திடீரென உருவாகும் கட்சிகள் காலப்போக்கில் செல்லாக்காசாகி விடும் என்று TTV தினகரன் விமர்சித்துள்ளார். அமமுகவின் 9-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமக்காக மட்டுமே வாழும் சுயநலமிகளை காலம் சக்கையென துப்பி தூர வீசிவிடுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டது சசிகலாவையா (அ) விஜய்யையா என்ற கேள்வி விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. உங்கள் கருத்து?
News March 14, 2026
வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற கிரிக்கெட்டர்ஸ்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரோஜர் பின்னி, ராகுல் டிராவிட் & மிதாலி ராஜ் ஆகியோருக்கு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, கிரிக்கெட்டில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து நாட்டிற்காக சிறப்பான பங்களிப்பிற்காக வழங்கப்படும் BCCI-யின் உயரிய விருதாகும். இந்த 3 பேரின் குறிப்பிடத்தக்க சாதனைகளை மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து பாருங்கள்.
News March 14, 2026
விஜய்+ இபிஎஸ்+ மோடி.. PHOTO டிரெண்டிங்

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து சிடிஆரும், ‘கூட்டணி இல்லை’ என வெளிப்படையாக கூறாமல், பூசி மெழுகி விளக்கமளித்தார். இதனால், NDA – தவெக இடையே மறைமுகமாக <<19377982>>கூட்டணி <<>>பேச்சுவார்த்தை தொடர்கிறதா என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், மோடி, EPS, விஜய் ஆகியோர் ஒன்றாக இருக்கும் AI மூலம் உருவாக்கிய போட்டோக்களை SM-ல் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.


