News April 7, 2024
டாஸ் வென்று பவுலிங் செய்கிறது டெல்லி

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் முதல் போட்டியில் டெல்லி – மும்பை அணிகள் 3.30 மணிக்கு மோதவுள்ளன. அதற்கான டாஸில் வென்று பவுலிங் செய்ய தேர்வு செய்துள்ளது டெல்லி அணி. ஹர்திக் தலைமையிலான மும்பை அணியில் சூர்யகுமார், நபி, ரொமாரியோ ஆகியோர் இணைந்திருக்கின்றனர். டெல்லி அணியில் இரண்டு புதிய வீரர்கள் சேர்ந்துள்ளனர்.
Similar News
News March 18, 2026
IPL 360: கேப்டனான இஷான் கிஷன்!

*பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக, சில போட்டிகளில் விளையாட மாட்டாராம். அப்போட்டிகளில் இஷான் கிஷன் SRH கேப்டனாக செயல்படவுள்ளார் *RR அணியை வாங்க ArcelorMittal நிறுவனம் முயன்று வருகிறதாம் *ஓப்பனராக விளையாட KL ராகுல் விரும்பும் நிலையில், அவரை மிடில் ஆர்டரில் விளையாட வைக்க DC அணி முயற்சி செய்து வருகிறதாம் *RCB அணியை வாங்குவதற்கு EQT என்ற ஸ்வீடன் நிறுவனம் ₹18,500 கோடி வரை ஆஃபர் செய்துள்ளதாம்.
News March 18, 2026
நல்ல மீன் Vs கெட்டுப்போன மீன்: எப்படி பார்த்து வாங்குவது?

மீன் வாங்கும்போது, அது நல்ல மீனா என்பதை அறிய சில டிப்ஸ் உள்ளது *துர்நாற்றம் வீசக்கூடாது. மீனில் கடலின் உப்பு வாசனை இருக்க வேண்டும். * செதில்களுக்கு கீழே, மஞ்சளாக இருந்தால் அந்த மீன் கெட்டுப்போனது என அர்த்தம். செதில்களுக்கு கீழே, அடர் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் *மீனின் கண்கள் பிரகாசமாக இருக்க வேண்டும். குழி விழுந்து இருக்கக்கூடாது *மீனின் உடல் கொழகொழவென்று இருந்தால் வாங்காதீர்கள்.
News March 18, 2026
சீமை கருவேல மரங்கள்.. கோர்ட் புதிய உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிட மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில், சீமை கருவேல மரங்களை அகற்றிட வட மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், தென்மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம் கண்காணிப்பு அலுவலர்களாக செயல்படுவர் என்றும் கோர்ட் கூறியுள்ளது. அம்மரங்களை எப்படி அகற்றுவது என்பது பற்றி 39 உத்தரவுகள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கோர்ட் தெரிவித்துள்ளது.


