News August 14, 2025

மது விற்றால் கடும் நடவடிக்கை

image

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக், கிளப், பார் உட்பட அனைத்து இடங்களில் நாளை மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும், தடையை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி திருக்கோவிலூர் பகுதியில் மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி பார்த்திபன் எச்சரிக்கை.

Similar News

News August 14, 2025

மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை (14.08.2025) இரவு 10 மணி முதல், நாளை வெள்ளி கிழமை (15.08.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News August 14, 2025

சுதந்திர தின விழாவுக்கு அழைப்பு

image

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அழைப்பு விடுத்துள்ளார்

News August 14, 2025

கள்ளக்குறிச்சியின் பிரமாண்ட முருகன் சிலை

image

தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறுமுகன் என்ற சிறப்பு பெயர் உண்டு. முருகனின் ஆறுமுகத்தை குறிக்கும் வகையில் ஆறு முகங்களை கொண்ட 81 அடி பிரமாண்ட முருகன் சிலை கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ். கொளத்தூரில் உள்ளது. அறுமுகனான முருகனின் ஆறு முகங்களை ஒரே நேரத்தில் பார்க்க விரும்புவர்கள் கள்ளக்குறிச்சி முருகன் கோயில் சென்று வரலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!