News August 14, 2025

விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர்சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் தினேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை,வருவாய் அலுவலர் ,சாதனைகுரல் இந்து அமைப்பினர் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பான முறையில் நடத்த வழிமுறைகள், அனுமதி பெறுவது, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, ஊர்வலம் நடத்துவது, சிலைகள் கரைப்பது பற்றி அறிவுறுத்தப்பட்டது.

Similar News

News August 14, 2025

கிருஷ்ணகிரியின் குட்டி இங்கிலாந்து எது தெரியுமா?

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள தளி பகுதிக்கு லிட்டில் இங்கிலாந்து என்ற சிறப்பு பெயர் உண்டு. அடர்ந்த வனப்பகுதி மற்றும் குளிர்ந்த இதன் வானிலை இங்கிலாந்தை ஒத்திருப்பதால் ஆங்கிலேயர்கள் தளியை “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைத்து வந்தனர். சிறப்பு பெயருக்கு ஏற்ப குளிர்ந்த சூழலோடு, அறியப்படாத சுற்றுலா தலமாக தளி உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

ஓசூர் பகுதியில் பயங்கர விபத்து

image

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் அருகே இன்று (ஆகஸ்ட் 14) கோப சமுத்திரம் பகுதியில் உள்ள சாலையில் பெரிய கனரக லாரி ஆனது இரண்டு கார்களின் மீது சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News August 14, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும்..IOB வங்கியில் சூப்பர் வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்?. IOB-யில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் 200 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆக 20-க்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!