News April 7, 2024
NIA அதிகாரிகள் மீது வழக்கு

மே.வங்கத்தில் NIA அதிகாரிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் 2 TMC தொண்டர்களை சனிக்கிழமை NIA கைது செய்தது. அப்போது NIA வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து NIA புகார் அளித்த நிலையில், கைதான நபர்களின் குடும்பத்தினரும் புகார் அளித்தனர். அதன்பேரில், பெண்ணை துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
சொந்தக் காலில் இந்தியா தனித்து நிற்கிறது: FM

பொருளாதார பலம் காரணமாக இந்தியா தனித்து சொந்தக்காலில் உயர்ந்து நிற்பதாக FM நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இல்லை என்று சொல்பவர்களை நம்பி அடிபணியக்கூடாது என அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நம் நாடு வேகமாக முன்னேறும் காலத்தில் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
News November 5, 2025
நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவதற்கு ஹீரோக்களின் சம்பளமும் ஒரு காரணம் என்றும், அதை குறைத்தால் படத்தின் மேக்கிங்கிற்கு கூடுதல் செலவு செய்யலாம் எனவும் அவர் கூறினார். தனது கடைசி 3 படங்கள் லாபம் ஈட்டியதாகவும் குறிப்பிட்டார். பல டாப் ஹீரோக்கள் படத்தின் பட்ஜெட்டில் 50-60% சம்பளமாக பெறுகின்றனர் என்பது கோலிவுட் வட்டார தகவல்.
News November 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 510 ▶குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். ▶பொருள்: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.


