News August 14, 2025
புதுச்சேரி வாகனங்கள் டில்லி செல்ல தடை!

“தேசிய தலைநகரான டில்லி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்த காற்று தர மேலாண்மை அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அனைத்து போக்குவரத்து மற்றும் வணிக பொருட்களை ஏற்றிச் செல்லும் பழைய வாகனங்கள் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் டில்லிக்குள் நுழைய, கட்டாயமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்று புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
புதுச்சேரி மக்களே இனி அலைச்சல் இல்லாம APPLY பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே.. முக்கிய அரசு ஆவணங்களை அலைச்சல் இல்லாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்க எளிய வழி:
▶️ பான்கார்டு: onlineservices.proteantech.in
▶️ வாக்காளர் அடையாள அட்டை: <
▶️ ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
▶️ பாஸ்போர்ட்: www.passportindia.gov.in
▶️ இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்
News August 14, 2025
ரெஸ்டோபார்களையும் மூட வேண்டும்; ராமதாஸ் அறிக்கை

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மிஷன் வீதியில் உள்ள ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, மற்றொருவர் படுகாயம் அடைந்திருப்பதும் வருத்தத்திற்குரியது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புனிதத் தன்மை, கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டுமெனில் அனைத்து ரெஸ்டோ பார்களை உடனடியாக மூட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
புதுவைகள் சுகாதார பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு

புதுவை சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மகப்பேறு உதவியாளர், மருந்தாளுநர், இசிஜி தொழில்நுட்ப வல்லுநர், அறுவை சிகிச்சை உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 13ம் தேதி நடப்பதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட இத்தேர்விற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் தேர்வுகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.