News August 14, 2025
கடலூர்: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கடலூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9486793372) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News August 14, 2025
மீன் குஞ்சுகள் இருப்பு திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

கடலூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், கடலூர் மாவட்டம், புதுக்குப்பம் மீனவ கிராமம் அருகேயுள்ள கடற்பகுதியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை இயக்குனர் கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News August 14, 2025
கடலூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை !

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 14, 2025
கடலூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை (பாகம்-2)

▶️ வயது வரம்பு – 21-30 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 ( எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ தமிழ்நாட்டிலேயே பணி நியமனம் வழங்கப்படும்
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!