News August 14, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிட்ட விழிப்புணர்வுச் செய்தியில், குழந்தைகளுக்கு `குட் டச், பேட் டச்’ குறித்து கற்பிக்க வலியுறுத்தியுள்ளது. முக்கியமாக, மகள்களுக்கு மட்டுமல்லாமல் மகன்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படும்போது உதவ, குழந்தைகள் உதவி எண் 1098 தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. \
Similar News
News August 14, 2025
ராணிப்பேட்டை: திமுக நிர்வாகி மறைவிற்கு அமைச்சர் அஞ்சலி

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் திமுக மேற்கு ஒன்றிய பொருளாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான பாலன் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரது உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
News August 14, 2025
ராணிப்பேட்டை: சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்

ராணிப்பேட்டை மாவட்டம், இன்று (ஆகஸ்ட் 15) நாட்டின் 79 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிக்காக 615 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்துள்ளார். மேலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்தார்.
News August 14, 2025
ராணிப்பேட்டை: ரூ.72,000 சம்பளத்தில் வேலை!

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் <