News August 14, 2025
விருதுநகர் மக்களே… இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News August 16, 2025
விருதுநகர்: 10th படித்திருந்தால் ரூ.69,100 சம்பளம்

விருதுநகர் மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இறுதிநாள் என்பதால் இந்த <
News August 15, 2025
ஊஞ்சல் சேவையில் ஆண்டாள், ரெங்கமன்னார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடி மாத கடைசி
வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
News August 15, 2025
விருதுநகர்: கால அவகாசம் நீட்டிப்பு

பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிக்கு முன்பதிவு செய்ய கால அவகாசம் ஆக.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.