News August 14, 2025
ஹைதராபாத் சிறப்பு ரயில் அக்டோபர் வரை நீட்டிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் கொல்லம்- ஹைதராபாத்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை (07193/07194) வரும் அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹைதராபாத்-கொல்லம் ரயில் ஆக.16 முதல் அக்.11 வரையும், கொல்லம்-ஹைதராபாத் ரயில் ஆக.18 முதல் அக்.13 வரையும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்தி கொள்ள சேலம் கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News August 16, 2025
சேலம்: 10-ம் வகுப்பு போதும்.. புலனாய்வு துறையில் வேலை!

சேலம் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள, 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ, 21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 16, 2025
சேலத்தில் இப்படி மோசடி கவனமாக இருங்கள்

அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை தொடர்பு கொண்டு, உங்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் அத்தொகையைப் பெற QR Code ஸ்கேன் செய்து, PIN உள்ளிடச் சொல்லி அறிவுறுத்துவார்கள். அத்தகைய நபர்களை நம்பி QR Code ஸ்கேன் செய்து PIN உள்ளிடும் போது, உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும். இத்தகைய மோசடி அழைப்புகளை நம்பி உங்களது பணத்தை இழக்க வேண்டாம் என சேலம் சைபர் க்ரைம் போலீசார் அறிவுறை.
News August 16, 2025
CM ஸ்டாலின் வருகை சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலத்திற்கு வருகை தந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் பேச உள்ளார். முதலமைச்சர் வருகைக்காக 10 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையில் இருபுறங்களும் கொடிகள் நடப்பட்டு மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.