News August 14, 2025
திருவள்ளூர் வாக்காளர்கள் கவனத்திற்கு…

திருவள்ளூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். <
Similar News
News August 14, 2025
திருவள்ளூர் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 122 அரசு டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை மண்டல பொது மேலாளரிடம் ஒப்படைக்க, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்துள்ளனர். சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிவாததால் பாதுகாப்பு கருதி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து 122 கடைகளுக்கும் பாதுகாப்பு கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
News August 14, 2025
திருவள்ளூர்: ஆம்னி பஸ்ல அதிக கட்டணமா? கவலை வேண்டாம்

தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 வரையும், சென்னை- கோவை, சென்னை- திருச்சிக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், விடுமுறை நாட்களில் இது தொடர்கதையாக உள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் 1800-424-6151 எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News August 14, 2025
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஆடி கிருத்திகை முன்னிட்டு அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே தெற்கு ரயில்வே இன்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்க உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கும், திருத்தணியில் இருந்து அரக்கோணத்திற்கும் இயக்கப்படும். இது பக்தர்களுக்கு வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.