News August 14, 2025
செங்கல்பட்டு: சொந்த ஊரில் வங்கி வேலை!

செங்கல்பட்டு மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள் இந்த <
Similar News
News August 16, 2025
செங்கல்பட்டு இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை!

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி & ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் <
News August 16, 2025
செங்கல்பட்டு: கிருத்திகைக்கு போக வேண்டிய முருகன் கோயில்கள்!

ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பல புராதன முருகன் கோயில்களைக் கொண்டுள்ளது. அதில்,
▶️திருப்போரூர் கந்தசாமி கோயில்,
▶️செம்மலை முருகன் கோயில்,
▶️ஆனூர் கந்தசுவாமி கோயில்
▶️சாளுவன்குப்பம் முருகன் கோயில்
▶️செய்யூர் முருகன் கோயில் குறிப்பிடத்தக்கவை. செல்வ செழிப்பு & மகிழ்ச்சி பொங்க ஆடிக் கிருத்திகையில் இங்கு சென்று முருகனை வழிபடுங்க. ஷேர்!
News August 16, 2025
செங்கல்பட்டு: கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

செங்கல்பட்டு, அச்சிறுபாக்கம் அருகே ஆத்தூர் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவர் நேற்று (ஆகஸ்ட் 15) மதியம் வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகர் கோயில் திருவிழாவிற்கு, ஒலிபெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.