News August 14, 2025
வாக்கு திருட்டு: யாத்திரையை தொடங்கும் ராகுல்

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுக்கு எதிராக வரும் 17-ம் தேதி பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை தொடங்குகிறார். மாநிலம் முழுவதும் நடத்தப்படும் யாத்திரை வரும் செப்டம்பர் 1-ம் தேதி பாட்னாவில் நிறைவடைகிறது. இதில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 16, 2025
தோனி நீக்கியதால் ஓய்வு பெற முடிவெடுத்தேன்: சேவாக்

2015-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் சேவாக். ஆனால், 2008-09 காமன்வெல்த் போட்டிகளின்போது தோனி தன்னை அணியில் இருந்து நீக்கியபோதே ஓய்வை அறிவிக்க நினைத்ததாக சேவாக் கூறியுள்ளார். ஆனால், அப்போது சச்சினிடம் இதுகுறித்து ஆலோசித்தபோது, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என கூறியதாகவும், அதன்பிறகு கோப்பை வென்ற 2011 உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்று நல்ல ஸ்கோர் செய்ததாக தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
கிருஷ்ணர் தலையில் மயில் இறகு இருக்கும் ரகசியம்!

வனவாசத்தின் போது, தாகத்தால் தவித்த சீதைக்கும், ராமருக்கும் மயில் ஒன்று உதவ முன்வந்தது. நீர் இருக்கும் இடம் வெகுதூரம் என்பதாலும், அடர்ந்த காடு என்பதாலும், அவர்கள் வழி தவறி போய்விட கூடாது என்பதற்காக தனது இறகை உதிர்த்துக் கொண்டே சென்றது மயில். நீர் நிலையை ராமர் அடைந்த போது, மயில் இறந்து கிடப்பதை பார்த்தார். அதன் தியாகத்திற்காக, கிருஷ்ணர் அவதாரத்தில் தலையில் மயிலிறகை சூடிக் கொண்டார் என்பது ஐதீகம்.
News August 16, 2025
கூலி படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை: ஆமீர் கான்

கூலி படத்தில் நடித்ததற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கான் ₹20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இந்நிலையில், இதை மறுத்துள்ள ஆமீர் கான், கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.