News August 14, 2025

அரியலூர்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆக.15ம் தேதி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை மதுபான கடைகள் மற்றும் கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதையோ, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News August 16, 2025

அரியலூர்: அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் சேர்க்கை நீட்டிப்பு

image

2025-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT NOW…

News August 16, 2025

அரியலூர் மாவட்டம் இரவு ரோந்து விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

News August 16, 2025

அரியலூர் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (15/08/2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!