News August 14, 2025

பெரம்பலூர்: ரூ.18,000 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.8,500 – 18,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பத்தை பதிவிரக்கம் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து இன்று (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 16, 2025

பெரம்பலூர்: வேளாண்மை உதவி இயக்குநர் எச்சரிக்கை

image

வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள டி.ஏ.பி மற்றும் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை ஆய்வு செய்தார். அப்போது அவர், “உரங்களை மூட்டையில் உள்ள விலைக்கு மேல் அதிகமாக விற்றால் மற்றும் விற்பனை செய்யும்போது அத்துடன் இணைப்பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தினால் விற்பனை உரிமம் ரத்து செய்து, நீதிமன்ற வழக்கு தொடரப்படும். என்று எச்சரித்துள்ளார்.

News August 16, 2025

கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

image

பெரம்பலூர் நகரப் பகுதியில் சிவன் கோயில் அருகில் ஆட்டோ டிரைவர் ரவி என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் வழிமறித்து, அருவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். ஆபத்தான நிலையில் ரவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் ஈடுபட்ட கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News August 15, 2025

பெரம்பலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தண்டாயுதபாணி திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான தண்டாயுதபாணி சுவாமிக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!