News April 7, 2024
புதுகை: தாயை அரிவாளால் தாக்கிய மகன் மீது வழக்கு

புதுகை, போசம்பட்டியை சேர்ந்தவர் மீனா இவரது மகன் வினோத்குமார் ஆகியோருக்கு இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார் மீனாவை அரிவாளால் தாக்கியதாக மீனா கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வினோத்குமார் மீது
வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 7, 2026
புதுக்கோட்டை: ரயில்வேயில் வேலை- தேர்வு கிடையாது!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <
News March 7, 2026
சாதனை மலரை வெளியிட்ட புதுகை கலெக்டர்!

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(மார்.6) “கனவு மெய்ப்பட வேண்டும்” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், கலெக்டர் அருணா தலைமையில், தமிழக அரசின் சார்பில், கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த சிறப்பு மலரை வெளியிடப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உள்ளிட்ட அரசு அலுவகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News March 7, 2026
புதுகை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


