News August 14, 2025
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க இங்கு போங்க

காஞ்சிபுரத்தில் இன்று (ஆகஸ்ட்.14) மாங்காடு, காஞ்சிபுரம், குன்றத்தூர், ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 15, 2025
FLASH: பரந்தூர் விமான நிலையம் அமைவதை எதிர்த்து தீர்மானம்!

பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்க 2022-ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஆக.15) நடந்த கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை பற்றிய உங்கள் கருத்து என்ன?
News August 15, 2025
காஞ்சிபுரம்: இலவச AI பயிற்சி, ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்!

காஞ்சி மக்களே, AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், AI ஆராய்ச்சி அசோசியேட் ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெற ஏற்பாடு செய்யப்படும். <
News August 15, 2025
விடுதலை போரில் காஞ்சிபுரத்தின் பங்கு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை உங்களுக்கு தெரியுமா? மார்க்கபந்து, KS.பார்த்தசாரதி, M.P.ரங்காராவ், R.கணேசன், M.G.சக்கரவர்த்தி நாயக்கர், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன், நெல்லி கேசவ செட்டியார், எம்.ராஜி நாயக்கர், குப்புசாமி முதலியார், ஜானகி அம்மாள், டி.ராஜி முதலியார், என் சொக்கலிங்கம். காஞ்சிபுரத்தில் சுதந்திர தினத்தில் போராடிய தியாகிகளை நினைவு கூர்வோம்!