News August 14, 2025

மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த லிங்கில் கிளிக் <<>>செய்து செங்கல்பட்டில் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 14, 2025

பேருந்தில் அதிக கட்டண வசூலா.? இதை செய்யுங்க

image

தொடர் விடுமுறையை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் படையெடுத்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 வரையிலும், திருச்சி போன்ற நகரங்களுக்கு ரூ.1,500-ரூ.3,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது, 1800-424-6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

பராமரிப்பு பணி; சென்ட்ரல் – கூடூர் இடையே ரயில்கள் ரத்து

image

சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்றும், ஆகஸ்ட் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்குக் கும்மிடிப்பூண்டி செல்ல வேண்டிய ரயில் சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்குத் தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.

News August 14, 2025

செங்கல்பட்டு காவல்துறை மாற்று வழி அறிவிப்பு

image

சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறைகள் காரணமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகன ஓட்டிகள் கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) மற்றும் செங்கல்பட்டு-திருப்போரூர் சாலை (GWT) போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம் என செங்கல்பட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, பாதுகாப்பாகச் செல்லுங்கள்.

error: Content is protected !!