News April 7, 2024

ஆசிரியரை சரமாரியாக வெட்டி நகை பறிப்பு

image

மதுரை களிமங்களம் அரசு துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் லட்சுமி(58). இவர் நேற்று சேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது கருப்பாயூரணி அருகில் ஆட்டோ ஓட்டுநர், டீசல் நிரப்புவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று லட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துச் சென்றார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 31, 2026

மதுரை: வேலை கிடைக்காததால் கொத்தனார் தற்கொலை

image

மதுரை ஜெய்ஹிந்த்பு­ரத்தை சேர்ந்­த­வர் முத்துக்குமார்(29). சென்­னையில் கொத்­த­னார் வேலை பார்த்து வந்த நிலை­யில் அங்கு நிரந்­த­ர­மாக வேலை கிடைக்­கா­மல் மதுரைக்கு திரும்பி வந்­தார். இங்கும் சரியாக வேலை கிடைக்­க­வில்லை. இதனால் மன வருத்­தத்தில் இருந்து வந்த முத்துக்குமார் இன்று
வீட்­டில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்பு­ரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News January 31, 2026

மேலூர் அருகே 4 வழிச்சாலை கார் விபத்தில் ஒருவர் பலி

image

புதுக்­கோட்டை மாவட்டம் பொன்­ன­ம­ரா­வதியை சேர்ந்­தவர் பழனிச்­சாமி(47). இவர் திருச்சி மதுரை நான்கு வழி சாலை­யில் பைக்கில் நேற்று சென்ற போது, வெள்ளமலைப்­பட்டி சந்­திப்­பு அருகே, நாகர்­கோ­யிலை சேர்ந்த ரெம்­மிங்­டன் ஓட்­டி வந்த கார் பைக் மீது மோதி­யது. இதில் தூக்கி வீசப்பட்ட பழ­னி­சா­மி சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 31, 2026

மதுரை: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

image

மதுரை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

error: Content is protected !!