News August 14, 2025

சேலம் மாவட்ட மனநல காப்பகங்களுக்கு ஒரு மாத கெடு

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மனநல காப்பக நிறுவனங்களும் ஒரு மாதத்திற்குள் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார். இதற்காக, https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தலைமை அலுவலகத்திலோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News August 15, 2025

சேலத்தில் 21 தலைமுறை பாவங்கள் நீக்கும் கோயில்!

image

சேலம், மேச்சேரியில் மிகவும் சக்தி வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் அம்மனை தரிசனம் செய்வதால், 21 தலைமுறையில் செய்த பாவங்கள், நோய்கள் போன்றவை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலுக்கு வர அது அவர்களை விட்டு விலகுமாம். இதை நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 15, 2025

சேலத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

image

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மாலை சேலம் வருகிறார். இதன் காரணமாக, சேலம் மாநகரப் பகுதிகளில் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

News August 15, 2025

சேலம்: உதவியாளர் வேலை.. ரூ.96,000 சம்பளம்!

image

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 16 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!