News August 14, 2025
தூத்துக்குடியில் புகைப்படப் போட்டி அறிவிப்பு

தூத்துக்குடி 6வது புத்தகத் திருவிழா ஆக.22 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, புகைப்படப் போட்டி ஆக. 14 – 21 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட கலாச்சாரம், பாரம்பரியம், இயற்கை, தொழிலாளர் வாழ்க்கை போன்ற தலைப்புகளில் அதிகபட்சம் 5 சொந்தப் படங்களை, AI/கிராபிக்ஸ் இல்லாமல், 5 MBக்கு குறைவாக, thoothukudi.nic.in மூலம் பதிவேற்றலாம்.
Similar News
News August 15, 2025
55 ஆண்டுகள்.. மரணத்திலும் இணைபிரியா தூத்துக்குடி தம்பதி

சாத்தான்குளம் அருகே உள்ள போலையாபுரத்தை சேர்ந்தவர் பச்சைப்பூதர்மராஜ் (83) இவரது மனைவி தங்க புஷ்பம் (73). திருமணம் ஆகி 55 ஆண்டுகள் ஆகின்றன. தங்க புஷ்பம் இன்று காலை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் இறந்த சில மணி நேரங்களில் உடல்நலக்குறைவு காரணமாக பச்சைப்பூதர்மராஜ் இறந்தார். கணவன் மனைவி ஒரே நாளில் இறந்தது அனைவரையும் மீள துயரத்தில் ஆழ்தியுள்ளது.
News August 15, 2025
தூத்துக்குடி: 10th போதும்.. ரூ.63,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்திய கடற்படையில், டிரேட்ஸ்மேன் பணிக்கு 1,226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்டுகிறது. 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13.08.2025 முதல் 02.09.2025ம் தேதிக்குள் இந்த <
News August 15, 2025
தூத்துக்குடி: கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் நகை கொள்ளை

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகராக இருந்த குமார் பட்டர், கடந்த மாதம் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவரது மனைவி பிரியா, உறவினர் வீட்டில் தங்கியிருந்து, ஆகஸ்ட் 13 அன்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 107 பவுன் தங்க நகைகள், வெள்ளி, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. குலசேகரபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.