News August 14, 2025
நீட் கவுன்சலிங் பட்டியல் வெளியானது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் (UG) முதல்கட்ட கவுன்சலிங் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லூரிகளை வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் அணுக மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) அறிவுறுத்தியுள்ளது. ஒதுக்கீடு கடிதங்களை MCC இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். சீட் ஒதுக்கீடு பட்டியலை காண <
Similar News
News August 15, 2025
கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் அண்ணாமலை?

தமிழகம் வந்த பாஜகவை சேர்ந்த பி.எல்.சந்தோஷ் OPS-யை சந்திக்கவில்லை. இது ஏன் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகிவுள்ளன. அதில், OPS-யை சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டதாகவும், ஆனால் இந்த சந்திப்பால் இபிஎஸ் அதிருப்தி ஆகிவிடக்கூடாது, மேலும் அண்ணாமலையின் முயற்சி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது போல் தெரிவதால் சந்திப்பை தவிர்க்குமாறும் பாஜக மூத்த நிர்வாகிகள் சந்தோஷிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
News August 15, 2025
பாக்., இந்தியாவிடம் மோசமாக தோற்கும்: EX பாக் வீரர்

லெஜண்ட்ஸ் லீக் போன்று ஆசிய கோப்பையிலும் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என முன்னாள் பாக்., வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தியா விளையாடினால் பாக்., மோசமாக தோற்கும் என்றும், AFG-யிடம் தோற்றால் கூட ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்கள், ஆனால் இந்தியாவிடம் தோற்றால் பைத்தியம் பிடித்தது போல ரியாக்ட் பண்ணுவார்கள் என கூறினார். சமீப காலமாக பாக் அணி மோசமான பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 15, 2025
ஆகஸ்ட் 15: வரலாற்றில் இன்று

* 1947 – இந்தியா சுதந்திரமடைந்த நாள். இன்று 78-வது சுதந்திர தினம்.
* 1872 – இந்தியத் தேசியவாதியும், ஆன்மிகத் தலைவருமான அரவிந்தர் பிறந்த தினம்.
* 1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
* 1948 – கொரியக் குடியரசு உருவானது.
* 1964 – நடிகர் அர்ஜுன் பிறந்தநாள்.