News August 14, 2025
கோவை மாநகராட்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (14.08.2025) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 1.கிழக்கு மண்டலம் வார்டு எண் 5, இடம் -பங்காரு திருமண மண்டபம், 2.மேற்கு மேற்கு மண்டலம் (வார்டு எண் 17 & 33) இடம் -சுஹிதா மஹால் திருமண மண்டபம், டி.வி.எஸ் நகர் கவுண்டம்பாளையம்.
Similar News
News August 14, 2025
மாசு இல்லாத விநாயகர் சதுர்த்தி: கோவை கலெக்டர் அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளைத் தவிர்க்க வேண்டும். ரசாயன சாயங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது. இயற்கையான சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
பட்டாசுக்கடை உரிமம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி

கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதுவரை தற்காலிக பட்டாசு கடை அமைக்க 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் முழுமையான விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர்.
News August 14, 2025
கோவையில் இலவசமாக AI படிக்க வேண்டுமா?

செயற்கை நுண்ணறிவு படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அதுவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு,டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.விண்ணபிக்க<