News August 14, 2025
நாளை வலுவடையும் காற்றழுத்தம்.. கவனமா இருங்க!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை வலுவடையும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செ.பட்டு, தென்காசி, காஞ்சி, திருவள்ளூர், நெல்லை, கோவை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை நீடிக்குமாம். அதனால், வெளியே செல்லும் போது குடையை மறக்க வேண்டாம். கவனமா இருங்க மக்களே..!
Similar News
News August 14, 2025
உங்க ஊருக்கு அர்த்தம் தெரியுமா?

உங்க ஊர் என்ன? என்று கேட்டால், நாம் அருகிலுள்ள நகரம் (அ) மாவட்டத்தின் பெயரையே கூறுவோம். முகவரி எழுதும்போது மட்டுமே கிராமத்தின் பெயரை நினைவில்கொள்வோம். ஆனால், நாம் பிறந்த கிராமமோ (அ) டவுனோ தான் நமது அடையாளம். அவ்வாறான ஊர் பெயர்களில் உள்ள புரம், பட்டி, குளம், பாளையம் உள்ளிட்டவற்றின் அர்த்தங்கள் என்னவென்பதை மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். உங்கள் ஊர் என்னவென்பதை கமெண்ட் செய்யுங்கள்.
News August 14, 2025
65 லட்சம் வாக்காளர்கள் விவரத்தை வெளியிட SC ஆணை

பிஹாரில் SIR மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிட ECI-க்கு SC உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், 3 நாள்களுக்குள் டிஜிட்டல் வடிவில் மாவட்ட வாரியாக பட்டியலை வெளியிட வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது விவரங்களை வெளியிட முடியாது என ECI கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 14, 2025
சச்சினின் வருங்கால மருமகள்.. யார் அந்த சானியா?

<<17398284>>அர்ஜுன் டெண்டுல்கர்<<>> – சானியா சந்தோக் நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். மும்பை தொழிலதிபர் ரவி காயின் பேத்தியான சானியா, மற்ற இளம் தலைமுறையினரை போல் சமூக வலைதளங்களில் அதிகம் நாட்டம் காட்டியதில்லை. இந்தியாவில் முதல்முறையாக செல்லப் பிராணிகளுக்கென Mr. Paws எனும் மசாஜ் சென்டரை தொடங்கியவர். சாராவுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.