News August 13, 2025
சுதந்திர தின விழா ஆட்சியர் கொடியேற்ற உள்ளதாக அறிவிப்பு

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று காலை 9.05 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தியாகிகளை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்க உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா அறிவித்துள்ளார்
Similar News
News August 16, 2025
கள்ளக்குறிச்சில்: கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

உ.நெமிலியை சேர்ந்த மாரியும், ஆனந்தன் என்பவரும் ஒரே ஊர், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் மாரியின் வீட்டில் உள்ள வேப்பமர கிளை ஆனந்தன் வீட்டின் பக்கம் சென்றதால் ஆனந்தன், பழனிவேல், காசிராஜன், உண்ணாமலை, தமிழ்மணி ஆகியோர் சேர்ந்து அதை வெட்டியுள்ளனர். இதை கேட்ட மாரியை அனைவரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் 5 பேர் மீதும் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
News August 16, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட இரவு நேர ரோந்து பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) இரவு 10 மணி முதல், நாளை சனிக்கிழமை (16.08.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News August 15, 2025
தென்தொரசலூரை சார்ந்த மூதாட்டி பலி

தென்தொரசலூரை சேர்ந்த தங்கம்மாள் ஆகஸ்ட் 9-ம் தேதி அந்த கிராமத்தில் உள்ள குளத்துக்கு அருகே 100 நாள் வேலை திட்டத்திற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வாழியே சென்ற காட்டனந்தல் பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் தங்கம்மாள் மீது பைக்கால் தெரியாமல் மோதியுள்ளார். இதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.