News August 13, 2025
தீரா கடன்களை தீர்க்கும் நாமக்கல் கோயில்!

நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை, கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News August 16, 2025
நாமக்கல்: நிலம் வாங்கும் முன் இதை செய்யுங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. நாமக்கல் மக்களே நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய https://services.ecourts.gov என்ற இணையதளத்திற்கு சென்று நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம்.
News August 15, 2025
நாமக்கல்லில் முட்டை விலை மாற்றம் இல்லை

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) கூட்டம் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், ஒரு முட்டையின் விலை தொடர்ந்து ரூ.4.90 ஆகவே நீடிக்கிறது.
News August 15, 2025
நாமக்கல்: உதவியாளர் வேலை.. ரூ.76,000 சம்பளம்!

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 75 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.10,900 முதல் ரூ.76,380 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <