News August 13, 2025

17 வயது பள்ளி மாணவி கர்ப்பம்: கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

image

கோவை: காரமடைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இங்கு அவரது உறவினரான 17 வயது மாணவனும் படித்து வருகிறார். இந்தநிலையில் இருவரும் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 14, 2025

மாசு இல்லாத விநாயகர் சதுர்த்தி: கோவை கலெக்டர் அறிவிப்பு!

image

விநாயகர் சதுர்த்தியையொட்டி சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளைத் தவிர்க்க வேண்டும். ரசாயன சாயங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது. இயற்கையான சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

பட்டாசுக்கடை உரிமம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதுவரை தற்காலிக பட்டாசு கடை அமைக்க 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் முழுமையான விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர்.

News August 14, 2025

கோவையில் இலவசமாக AI படிக்க வேண்டுமா?

image

செயற்கை நுண்ணறிவு படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அதுவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு,டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.விண்ணபிக்க<> இங்கே கிளிக் <<>>செய்யவும்.(SHARE பண்ணுங்க)

error: Content is protected !!