News August 13, 2025
தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஆக.22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. 8 ,10 & 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. (ம) டிப்ளமோ படித்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்ய வரவுள்ளன. *ஷேர் செய்து உதவுங்கள்
Similar News
News August 14, 2025
தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை

சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்காசி ரயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பார்சல் அறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
News August 14, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (13.08.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி,புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
தென்காசி: வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை

வாசுதேவநல்லூர் ராமையா தெருவைச் சேர்ந்த பூவதி (26), புளியங்குடி தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். வேலை கிடைக்காத மனஉளைச்சலில், ஆக.11ம் தேதி மாலை பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வாசுதேவநல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை.