News August 13, 2025

கோட்டை மாரியம்மனுக்கு மஹா நெய்வேர்த்தியம்

image

சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று (ஆக.13) மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கும்பப் படையலிட்டு மஹா நெய்வேர்த்தியம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News

News August 14, 2025

ஹைதராபாத் சிறப்பு ரயில் அக்டோபர் வரை நீட்டிப்பு!

image

சேலம் வழியாக இயக்கப்படும் கொல்லம்- ஹைதராபாத்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை (07193/07194) வரும் அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹைதராபாத்-கொல்லம் ரயில் ஆக.16 முதல் அக்.11 வரையும், கொல்லம்-ஹைதராபாத் ரயில் ஆக.18 முதல் அக்.13 வரையும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்தி கொள்ள சேலம் கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

News August 14, 2025

சேலத்தில் இலவசமாக AI படிக்க வேண்டுமா?

image

செயற்கை நுண்ணறிவு படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம், அதுவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சேலம்,கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு,டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும்.(SHAREit)

News August 14, 2025

70% மானியம் அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் பகலில் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற மின்சாரத்தை பெற்று, அதன் மூலம் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை எளிதாக மேற்கொள்ள இயலும்.இத்திட்டத்தின்கீழ், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவிகித மானியத்தில் நிறுவப்படும். விண்ணப்பிக்க உங்கள் அருகில் உள்ள வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!