News August 13, 2025

வீட்டுக் கடனை அடைக்க ஈசியான வழி..!

image

பொதுவாக வீட்டுக் கடன் விஷயத்தில், ஆண்டுக்கு ஒரு EMI தொகையை கூடுதலாக செலுத்தி விரைவாக கடனை அடைத்து பணத்தை சேமிக்கலாம். அதைவிட சிறந்த வழி ஸ்டெப்-அப் EMI முறை. ஆண்டு வருமானம் அதிகரிப்பதற்கு ஏற்ப EMI தொகையை அதிகரிப்பதே இந்த முறையாகும். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு ₹1 கோடி வீட்டுக் கடன் பெற்றிருந்தால், அதனை 9 ஆண்டுகள் 8 மாதங்களில் அடைத்து ₹52 லட்சம் வரை வட்டியை சேமிக்க முடியும். SHARE IT.

Similar News

News August 14, 2025

வாக்கு திருட்டு: யாத்திரையை தொடங்கும் ராகுல்

image

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுக்கு எதிராக வரும் 17-ம் தேதி பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை தொடங்குகிறார். மாநிலம் முழுவதும் நடத்தப்படும் யாத்திரை வரும் செப்டம்பர் 1-ம் தேதி பாட்னாவில் நிறைவடைகிறது. இதில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

Coolie Review: மாஸ் காட்டினாரா லோகேஷ்?

image

‘கூலி’ படம் அதிகாலையிலேயே வெளிமாநிலங்கள் & வெளிநாடுகளில் ரிலீஸாகிவிட்டது. படத்தின் டைட்டில் கார்டிலேயே ரசிகர்களை விசில் பறக்க வைத்துள்ளார் லோகேஷ். ரஜினியின் எனர்ஜி குறையாத நடிப்பு சிலிர்க்க வைக்கிறது. இடைவேளை காட்சி எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகிறது. வழக்கம்போல் அனிருத் தனது இசையால் அரங்கம் அதிர வைத்துள்ளார் என்றே சொல்லலாம். மொத்தத்தில் ‘கூலி’ செம ட்ரீட் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

News August 14, 2025

அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களித்தது திமுக: EPS

image

அதிமுக என்ன செய்தது என்பதை சிறுபான்மையினர் உணர வேண்டும் என்று EPS கூறியுள்ளார். வாணியம்பாடியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு அப்துல் கலாம் நின்றபோது அவருக்கு எதிராக திமுக வாக்களித்ததாக சுட்டிக்காட்டினார். சிறுபான்மை மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், அடுத்து அதிமுக ஆட்சி அமையும் என்பதால் நீங்கள் பயப்பட வேண்டாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

error: Content is protected !!