News August 13, 2025

சென்னை மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

சென்னை மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த <>இணையதளத்தில்<<>>, உங்கள் EPIC எண்ணை பதிவிட்டு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். ஏதாவது புகார் இருந்தால் அதே இணையதளத்தில் உள்ள அதிகாரிகளை (ERO/BLO) தொடர்பு கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 15, 2025

பிராட்வே கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

image

நாளை 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இச்சுகந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பிராட்வே கன்னிகாபரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் முகத்தில் இந்திய மூவர்ணக் கொடி வடிவங்களும், தேசியச் சின்னங்களும் தீட்டிக் கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

News August 15, 2025

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

image

சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாள்கள் தொடர் விடுறை வருவதால் சென்னையில் வசிக்கும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். மக்கள் ஒரே நேரத்தில் சென்றதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.

News August 14, 2025

நாளை விருது வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

image

சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவின்போது விருதுகள், காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில், சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகளுக்கு ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூா் நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்மாநகராட்சி, நகராட்சிகளுக்கு நாளை விருதுகளை வழங்குகிறார்.

error: Content is protected !!