News August 13, 2025
கரூரில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடையே கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், மற்றும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே சம்மந்தபட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.
Similar News
News August 15, 2025
கரூர்: ஐடிஐ-யில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

கரூர்: ஐ.டி.ஐ-யில் வரும் ஆக.31ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கையில், ‘கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் கட்டண சலுகை, சைக்கிள், வரைபடக்கருவிகள், பாட புத்தகங்கள், சீருடை, காலணி ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News August 15, 2025
கரூர் ஆட்சியரகத்தில் சுதந்திர தின விழா

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு, ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், பல்வேறு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
News August 15, 2025
JOB: கரூர் வங்கியில் பயிற்சியுடன் சம்பளம்! APPLY NOW

கரூர் மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்..? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <