News August 13, 2025
தென்காசி: மமக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை

தென்காசி நகர மனித நேய மக்கள் கட்சி 15வது வார்டு கிளை பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று காலையில் நடந்தது. இதில் நகர தலைவர் அபாபீல் மைதீன் தலைமை வகித்து, நகர செயலாளர், பொருளாளர் மற்றும் நகர துணை அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தனர்.
Similar News
News August 14, 2025
தென்காசி மின்தடைகள் தெரடர்பான புகார் எண்கள்!

நம்ம தென்காசியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.. மின் தடை மற்றும் சூரைக்காற்று கனமழையின் காரணமாக மின்சாதனங்கள் சேதம் ஏற்பட்டால். இந்த எண்களுக்கு அழையுங்க!
⏩ 9445859032
⏩ 9445859033
⏩ 9445859034
இந்த எண்களை SAVE-ஐ பண்ணி…… மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 14, 2025
தென்காசி: விழிப்புணர்வுடன் இருங்க – காவல்துறை!

தென்காசியில் CYBER CRIME மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குற்றப்பிரிவு போலீசார் பேசுவதுபோல வீடியோ அழைப்பில் “நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறீர்கள்” என்றும், நீதிமன்றத்தில் இருந்து பேசுவதுபோல பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. www.cybercrime.gov.in -இல் புகார் அளிக்கலாம். நம்ம தென்காசி மக்கள் இதுக்கெல்லாம் அசர மாட்டோம்.. நம்ம மக்களுக்கு தெரியபடுத்த SHAREபண்ணுங்க!
News August 14, 2025
தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை

சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்காசி ரயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பார்சல் அறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு சோதனைகள் நடத்தி வருகின்றனர்.