News August 13, 2025
தாயுமானவர் திட்டத்தில் சேலம் மாவட்டம் முதலிடம்!

சேலம் மாவட்டத்தில் 1,265 முழு நேரம், 478 பகுதி நேரம் என 1,743 ரேஷன் கடைகள் உள்ளன. தாயுமானவர் திட்டம் மூலம் 92,998 ரேஷன்கார்டுகளுக்கு விநியோகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக எண்ணிக்கையில் பயன்பெறுவோரில், சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை இத்திட்டம் செயல்படுத்தப்படும் என, சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
சேலம்: உங்கள் சான்றிதழ் தயாரா? எளிய வழி!

சேலம் மக்களே…வருவாய்த்துறையின் பல்வேறு சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலையை எளிதாக அறிந்து கொள்ள தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துச் சான்றிதழ்களின் நிலையை, இந்த <
News September 16, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-போத்தனூர்-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்களை (06123/06124) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. செப்.25 முதல் அக்.24 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
சேலம் மக்களே.. இந்த வாட்ஸ் அப் நம்பர் முக்கியம்!

சேலம் மக்களே.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!