News August 13, 2025

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

image

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஆனால், புயலால் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவை, நீலகிரியில் கனமழைக்கு சற்று வாய்ப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

சச்சினின் வருங்கால மருமகள்.. யார் அந்த சானியா?

image

<<17398284>>அர்ஜுன் டெண்டுல்கர்<<>> – சானியா சந்தோக் நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். மும்பை தொழிலதிபர் ரவி காயின் பேத்தியான சானியா, மற்ற இளம் தலைமுறையினரை போல் சமூக வலைதளங்களில் அதிகம் நாட்டம் காட்டியதில்லை. இந்தியாவில் முதல்முறையாக செல்லப் பிராணிகளுக்கென Mr. Paws எனும் மசாஜ் சென்டரை தொடங்கியவர். சாராவுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

News August 14, 2025

பயங்கரவாத எதிர்ப்பில் பாக்., USA பாராட்டு

image

பாகிஸ்தானுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை கூறியுள்ளார் USA வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாக்., ஈடுபடுவதாக பாராட்டியுள்ள அவர், இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவு மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹைட்ரோகார்பன், கனிம வளங்கள் ஆகியவற்றில் புதிய பொருளாதார ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News August 14, 2025

தங்கம் ₹1,440 சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..!

image

இறங்கு முகத்தில் இருக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ₹1,440 சரிந்துள்ளது. ஆக. 8-ல் ₹75,760-க்கு விற்கப்பட்டு வந்த 1 சவரன், இன்றைய நிலவரப்படி ₹74,320-க்கு விற்பனையாகி வருகிறது. பொதுவாக, ஆடி மாதத்தில் கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை. தற்போது, ஆவணி தொடங்க இருப்பதால் திருமண நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் இந்த விலை சரிவை பயன்படுத்தி கொள்ளலாம்.

error: Content is protected !!