News August 13, 2025
விருதுநகர்: TASMAC கடைகளுக்கு பூட்டு.. ஆட்சியர் எச்சரிக்கை!

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA, FL11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை சுதந்திர தினமான ஆக.15 தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியாரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் கடைகள், மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 14, 2025
விருதுநகர்: 450 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15 (நாளை) விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, 100 நாள் வேலை திட்டம், ஜல் ஜீவன் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
விருதுநகர் மக்களே… இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 14, 2025
விருதுநகர்: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 மானியம்.. APPLY!

விருதுநகர் மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. இந்த இணையதளத்தில் Subsidy for eScooter என்ற <