News August 13, 2025
அரியலூர்: சிறப்பு கிராம சபைக் கூட்டம்-ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஜல் ஜீவன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள், சுயஉதவிக் குழு பெண்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு (15.08.2025) ஒருநாள் மட்டும் உலர் தினமாக (Dry Day) விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News August 13, 2025
அரியலூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK IT

அரியலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 13, 2025
அரியலூர்: ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ம் தேதிக்குள்<