News August 13, 2025

தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று(ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் முகவரி விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தும் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் எங்கும் அலையாமல் ஒரே இடத்தில மனுவாக அளித்து பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 14, 2025

திருவண்ணாமலையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆக.14) செங்கம் வட்டாரத்தில் மேல்பென்னாத்தூர் சமுதாயக்கூடம், கலசப்பாக்கம் வட்டாரத்தில் ரஜினி மண்டபம், வந்தவாசி வட்டாரத்தில் தென்சேந்தமங்கலம் விபிஆர்சி கட்டடம், சேத்துப்பட்டு வட்டாரத்தில் ஜேபிஜே மஹால், ஆரணி மேற்கு வட்டாரத்தில் சி.எம்.வளர்மதி மண்டபம், வெம்பாக்கம் வட்டாரத்தில் சட்டுவந்தாங்கல் விபிஆர்சி கட்டடம் ஆகிய பகுதிகளின் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.

News August 13, 2025

திருவண்ணாமலை அரசு பள்ளி ஆசிரியருக்கு டெல்லியில் விருது

image

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி
பட்டதாரி தமிழ் ஆசிரியர் இரா.முத்து கம்பன் அவர்கள், சர்வதேச அளவிலான Global Best Teacher Role Model Award விருதைப் பெறுகிறார். வரும் 24.08.2025 அன்று, புது டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இவர், மாநில அளவில் தமிழக அரசின் Dr. ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

News August 13, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று(ஆக.13) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!