News August 13, 2025
புதுக்கோட்டையின் பெயர் காரணம்!

புதுக்கோட்டை என்ற பெயரின் அர்த்தம் “புதிய கோட்டை” என்பதாகும். புதுக்கோட்டை மாவட்டம் தொடக்க காலத்தில் சோழ மற்றும் பாண்டியர்களுக்கு எல்லையாக இருந்தது. பின்னர், தொண்டைமான் மன்னர்கள் இப்பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கினர். இந்நிலையில் 17ம் நூற்றாண்டில், ரகுநாத ராய தொண்டைமான் புதிய கோட்டை ஒன்றை இங்கு கட்டிய காரணமாக இதற்கு புதுக்கோட்டை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 13, 2025
புதுக்கோட்டை: அரசு வேலை! EXAM கிடையாது…

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
News August 13, 2025
புதுகை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் வருகிற சுதந்திர தினத்தன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!