News August 13, 2025

விருதுநகரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA, FL11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை சுதந்திர தினமான ஆக.15 தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் கடைகள், மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Similar News

News August 14, 2025

விருதுநகர்: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 மானியம்.. APPLY!

image

விருதுநகர் மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. இந்த இணையதளத்தில் Subsidy for eScooter என்ற <>ஆப்ஷனை கிளிக்<<>> செய்து நீங்கள் உறுப்பினராக பதிவு செய்த பின்னர் அதில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 14, 2025

விருதுநகர்: தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு!

image

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை வழியாக தினமும் இயக்கப்படும் மதுரை – குருவாயூர் மதுரை ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்.10,12ல் மதுரை -குருவாயூர் ரயில்(16327), கொல்லம் வரை மட் டும் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் செப்.11,13ல் குருவாயூர்-மதுரை ரயில்(16328),கொல்லத்தில் இருந்து மதியம் 12:10 மணிக்கு புறப்படும் என அறிவித்துள்ளது.

News August 14, 2025

வெளி மாநிலத்தவர்களை ரசாயன கலவையில் ஈடுபடுத்தக் கூடாது

image

சிவகாசியில் சமீப காலமாக பட்டாசு ஆலைகளில் வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது அதிகரித்து வருகிறது. அவர்கள் கூலி அதிகம் கேட்காத காரணத்தால் இவ்வாறு செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மொழி பற்றிய தெளிவு இல்லாத தொழிலாளர்களை அபாயம் நிறைந்த ரசாயன கலவை பணிகளில் ஈடுபடுத்தினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வெளி மாநிலத்தவர்களை ரசாயன கலவை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!