News April 7, 2024

அன்கிதா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

image

ஜப்பான் ஐ.டி.எஃப்., டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் அன்கிதா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. காஷிவா நகரில் நடந்த மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா – தைவானின் சியா டிசாவோ ஜோடி, பிரிட்டனின் புரூக்ஸ் – ஹாங்காங்கின் சோங் ஜோடியுடன் மோதியது. ஒரு மணி நேரம், 20 நிமிடம் நடந்த போட்டியில் அன்கிதா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தங்கப் பதக்கத்தை வென்றது.

Similar News

News November 11, 2025

BIHAR EXIT POLL: தேஜஸ்விக்கு இந்த முறையும் வாய்ப்பில்லை

image

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கு(NDA) சாதகமாகவே உள்ளன. MATRIZE-IANS உடன் இணைந்து ABP நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் NDA-வுக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. NDA கூட்டணி 147 முதல் 167 இடங்களை வெல்லும். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி-காங்., உள்ளடக்கிய மகாகத்பந்தன் கூட்டணி 70-90 இடங்கள், மற்றவை 0-7 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

EXIT POLL: பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைப்பது யார்?

image

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. Gyaan Ka Bhandar India வெளியிட்டுள்ள சர்வேப்படி, NDA: 165-175, MGB: 65-70, மற்றவை: 3-10 இடங்கள் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. People’s Insight கருத்து கணிப்பு முடிவில் NDA: 133-148, MGB: 87-102, JSP: 0-2, மற்றவை: 3-6 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

BIHAR EXIT POLL: மீண்டும் NDA ஆட்சி

image

பிஹாரில் மீண்டும் NDA ஆட்சி அமையும் என TIMES NOW சேனல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. Satta Bazaar-ன் முடிவுகளை மேற்கோள் காட்டி NDA கூட்டணி 135-140 தொகுதிகள், MGB கூட்டணி 100-115 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!