News April 7, 2024
விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்க உள்ள கதாநாயகன் என்று கூறினார். மக்கள் முன்னேற்றத்திற்காக திமுக, காங்கிரஸ் பாடுபடுவதாக கூறிய அவர், மதத்தின் பெயரால் பிரதமர் மோடி பிரசாரம் செய்வதாக சாடினார்.
Similar News
News July 6, 2025
‘கில்’ இந்தி பட ரிமேக்கில் துருவ் விக்ரம்!

‘பைசன்’ படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் இந்தியில் வெளிவந்து பெரிய ஹிட்டடித்த ‘கில்’ படத்தின் ரிமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா என்பவர் இயக்க இருக்கிறார். ஒரு நாள் இரவில், ரயில் ஒன்றில் கொள்ளையர்களிடம் இருந்து ராணுவ அதிகாரி ஒருவர் பயணிகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.
News July 6, 2025
7 மாவட்டங்களில் மழை வெளுக்கப் போகுது: IMD

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?
News July 6, 2025
மனைவிக்கு தினமும் முத்தம் கொடுத்தா…

தினமும் வேலைக்கு போகும்போது, உங்கள் மனைவிக்கு முத்தம் கொடுப்பீர்களா? அப்படி முத்தம் கொடுத்துவிட்டுப் போகும் கணவன்மார்கள், முத்தம் கொடுக்கும் பழக்கம் இல்லாத கணவர்களை விட நீண்ட ஆயுளுடன் (சராசரியாக 5 ஆண்டுகள் கூடுதலாக) மகிழ்ச்சியாக வாழ்வதாக ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. முத்தமிடுவது நெருக்கத்தையும், நம்பிக்கையையும் அதிகப்படுத்துவதே இதற்கு காரணமாம். நீங்கள் எப்படி?