News August 12, 2025
சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஆக.13, 27, செப்.03 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும், ஆக.14, 28, செப்.04 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து பெங்களூருவுக்கும் சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் (06547/06548) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News August 13, 2025
சேலம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் முகாம்!

சேலம் ஆகஸ்ட் 14 உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் முகாம்கள்:
▶️ அம்மாபேட்டை சமுதாயக்கூடம் புத்துமாரியம்மன் கோவில். ▶️மாசிநாயக்கன்பட்டி கஸ்தூரிபா திருமண மண்டபம் அயோத்தியாபட்டினம்.
▶️ தலைவாசல் விளையாட்டு மைதானம் காமகபாளையம்.
▶️மேச்சேரி சுய உதவி குழு கட்டிடம் ஓலப்பட்டி.
▶️காடையாம்பட்டி எஸ் எஸ் வி ஜமீன் மஹால் நடுப்பட்டி.
▶️சங்ககிரி நாடார் சமுதாயக்கூடம் வட்டமலை. ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
News August 13, 2025
காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை!

நாட்டின் 79-வது சுதந்திர தின விழா வரும் ஆக.15- ஆம் தேதி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. காவல்துறையினரின் அணிவகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், சேலம் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
News August 13, 2025
சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில்கள் ரத்து

அக்.11-ல் தன்பாத்- கோவை சிறப்பு ரயில் (03679), அக்.14- ல் கோவை-தன்பாத் சிறப்பு ரயில் (03680), அக.13- ல் ப்ரௌனி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (12521), அக்.17- ல் எர்ணாகுளம்-ப்ரௌனி எக்ஸ்பிரஸ் ரயில் (12522) ஆகிய சேலம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.