News August 12, 2025
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.14 அன்று காலை 10 மணிக்கு கோரம்பள்ளம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., டிரைவர், கணினி பயிற்சி தகுதியுள்ளோர் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News August 14, 2025
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்

நாட்டின் 79வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (ஆக. 15) கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி தேசமே விழாக்கோலம் பூண்டு வருகிறது. அந்த வகையில் கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் சிகப்பு வெள்ளை பச்சை நிறத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
தூத்துக்குடி: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 மானியம்.. APPLY!

தூத்துக்குடி மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. <