News August 12, 2025
தருமபுரியில் ட்ரோன் பறக்கத் தடை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தர உள்ளார். இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி ஆகஸ்ட் 16 (சனிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 17 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
தர்மபுரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் இயங்க தடை

தருமபுரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் அனைத்தும் 14.8.2025 இரவு 10.00 மணி முதல் 16.8.2025 காலை 12.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க தர்மபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
News August 14, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று(ஆக.13) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 13, 2025
வேலைவாய்ப்பு கண்காட்சியினை பார்வையிட்ட ஆட்சியர்

நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் “மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர்ரெ.சதீஸ்,இன்று (13.08.2028) பார்வையிட்டார்கள். உடன் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன்.மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.