News August 12, 2025

தென்காசி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டால் இந்த செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <>கிளிக்<<>> பண்ணி செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News August 13, 2025

தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஆக.22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. 8 ,10 & 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. (ம) டிப்ளமோ படித்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்ய வரவுள்ளன. *ஷேர் செய்து உதவுங்கள்

News August 13, 2025

தென்காசி: வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை

image

வாசுதேவநல்லூர் ராமையா தெருவைச் சேர்ந்த பூவதி (26), புளியங்குடி தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். வேலை கிடைக்காத மனஉளைச்சலில், ஆக.11ம் தேதி மாலை பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வாசுதேவநல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News August 13, 2025

தென்காசி: மமக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை

image

தென்காசி நகர மனித நேய மக்கள் கட்சி 15வது வார்டு கிளை பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று காலையில் நடந்தது. இதில் நகர தலைவர் அபாபீல் மைதீன் தலைமை வகித்து, நகர செயலாளர், பொருளாளர் மற்றும் நகர துணை அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தனர்.

error: Content is protected !!