News August 12, 2025

சுரண்டை விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

image

தென்காசி, சுரண்டையை சேர்ந்த முத்துக்குமார் (25). நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாக உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு போனை அணைத்துவிட்டார். உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை பரங்குன்றாபுரம் பாலத்தில் மயங்கிய நிலையில் கிடந்தவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் நேற்று இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News August 13, 2025

தென்காசி: இங்கெல்லாம் இன்று மின்தடை

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (ஆக.13) பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. மற்றவர்களுக்கு SHARE பண்ணி அவுங்க பணிகளை வேகமாக முடிக்க சொல்லுங்க!

News August 13, 2025

திருக்குற்றநாதர் கோவிலில் பொது விருந்து

image

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட திரு குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பகல் 12:30 மணி அளவில் சிறப்பு வழிபாடும் அதனைத் தொடர்ந்து பொது விருந்து நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொள்ள திரு குற்றாலநாதர் கோவில் உதவி ஆணையர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News August 12, 2025

தென்காசி: கிராமங்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் இக்கிராம சபைக் கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!