News April 7, 2024
அரச குடும்ப வேட்பாளர்கள் (3)

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சாரங்கர் அரச குடும்பத்தை சேர்ந்த மேனகா தேவி சிங் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர், ஒருங்கிணைந்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வரான நரேஷ் சந்திர சிங்கின் மனைவி ஆவார். அத்தொகுதியில் சாரங்கர் அரச குடும்பத்துக்கு இருக்கும் செல்வாக்கை மனதில் கொண்டு, மேனகா தேவி சிங்கை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News January 29, 2026
முடிவுக்கு வருகிறதா RTI சட்டம்?

RTI சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது. 2019 -20 காலக்கட்டத்தில் 13.7 லட்சமாக இருந்த RTI விண்ணப்பங்கள் 2023 -24 -ல் 17.5 லட்சமாக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வறிக்கை, அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் இச்சட்டம் பல நேரங்களில் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், இதன்காரணமாக அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளது.
News January 29, 2026
ரோபோ சங்கருக்கு இறந்தபின் கிடைத்த கௌரவம்

ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமா துறையினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் ஈடுசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மறைந்த ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் இந்திரஜாவுக்கு சிறந்த நகைச்சுவை நடிகர், நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரோபாே சங்கரின் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News January 29, 2026
பிறந்த நாளுக்கு இனி விடுமுறை

போலீசார் தங்களது பிறந்தநாள், திருமண நாளன்று லீவ் எடுத்துக் கொள்ளலாம் என கர்நாடக DGP அறிவித்துள்ளார். மனதளவில் புத்துணர்ச்சி பெறவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், கடமைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமநிலையை பேணவும் இது உதவுகிறது. இதனால், மன உறுதியை அதிகரிப்பதோடு, மன அழுத்தமும் குறையும். இதன்மூலம், போலீசார் தங்களின் பணியில் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


